குடிமக்களின் நிகழ்ச்சி நிரல்

[Bahasa Melayu]    [华文]    [English]

பிரதான ஊடகங்கள் சிங்கப்பூரில் நடைபெறும் தேர்தல்களை நியாயமற்ற முறையில் மற்றும் மிகவும் முக்கியமற்ற முறையில் மறைக்க முனைகின்றன. இந்த அணுகுமுறை பிரச்சினைகளை பற்றி உண்மையாக கலந்துரையாட விரும்பும் மக்களை அந்நியப்படுத்துகிறது. இது குடிமக்களை தேர்தல் செயல்பாட்டில் செயலற்ற பங்கேற்பாளர்களாக நடத்துகிறது. குடிமக்கள் சிறந்தவற்றை பெறுவதற்கு தகுதியுடையவர்கள்.

வேட்பாளர்கள் மற்றும் கட்சித் தலைவர்களுடன் நேரடியாக உரையாடுவதற்கான வாய்ப்பை ஒருபோதும் பெற இயலாதவர்கள் எப்படி நிகழ்ச்சி நிரலில் தம் பிரச்சினைகளை இடம்பெற செய்யமுடியும்?

புதிய நராடிஃப் ஒரு புதிய முயற்சியை அறிவிக்கிறது: குடிமக்களின் நிகழ்ச்சி நிரல்.

ஒரு சுயாதீனமான, உறுப்பினர்களின் நிதியுதவி பெறும் வெளியீடாக, எங்கள் வாசகராகிய நீங்கள் எதைப் பற்றி கவலைப்படுகிறீர்கள் என்பதைக் கண்டுபிடிப்போம். பிறகு, உங்கள் பிரச்சினைகள் சிங்கப்பூரில் தற்போதுள்ள எங்கள் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட ஆழமான கட்டுரைகளுடன் இணைக்கப்பட்டு, எங்கள் பிரசுரத்திற்கு ஒரு வழிகாட்டியாக பயன்படுத்தப்படும். நாங்கள் எங்கள் வாசகர்களை நம்புகிறோம், உங்களுக்கு முக்கியமான பிரச்சினைகள் குறித்து நாங்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் தகவலளிப்போம்.

இதைச் செய்ய, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை நாங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இது எவ்வாறு செயல்படுகிறது என்பது இதோ இங்கே:

1. நாங்கள் நம் சமூகத்தை ஆய்வு செய்வோம், உங்களுக்கு மிக முக்கியமான பிரச்சினைகள் என்ன என்று கேட்போம்:

உங்கள் கருத்துப்படி, சிங்கப்பூருக்கு என்னென்ன பிரச்சினைகள் முக்கியமானவை என்று நீங்கள் கருதுகிறீர்கள்? வரவிருக்கும் தேர்தலில் உங்கள் வாக்குகளுக்காக போட்டியிடும் போது வேட்பாளர்கள் எதைப் பற்றி பேச வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

2. நாங்கள் பதில்களை பகுப்பாய்வு செய்து பிரச்சினைகளின் பட்டியலை தயாரிப்போம், பின்னர் முதல் 5 முக்கியமான பிரச்சினைகளை வரிசைப்படுத்த எங்களுக்கு உதவுமாறு உங்களிடம் கேட்டுக்கொள்வோம்.

3. புதிய நராடிஃப் இந்த பிரச்சினைகளால் வடிவமைக்கப்பட்ட கட்டுரைகளை எங்களுடைய எல்லா வடிவங்களிலும் தயார் செய்யும். இவற்றில் ஆழமான, சான்றுகளை அடிப்படையாகக் கொண்ட நீண்ட வடிவிலான இதழ்கள்; ஆய்வுகள்; விளக்கப்படங்கள்; வலையொலிகள்; கதைகள்; மற்றும் காணொளிகள் முதலியவையும் அடங்கும்.

4. நாங்கள் முதல் ஐந்து பிரச்சினைகளையும் தயார் செய்து ஒவ்வொரு கட்சியையும், ஒவ்வொரு வேட்பாளரையும் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணம்படி அழைப்போம், மேலும் அவர்களின் அனைத்து பதில்களையும் புதிய நாரதிஃப் இணையதளத்தில் பட்டியலிடுவோம். எந்தவொரு வேட்பாளரையும் பெயர் மற்றும் தொகுதியின் அடிப்படையில் நீங்கள் தேடலாம் மற்றும் அவர்கள் கேள்விகளுக்கு எவ்வாறு பதிலளித்தார்கள் (அல்லது பதிலளிக்க மறுத்துவிட்டார்கள்) என்பதை நீங்கள் காணலாம்.

இந்த நிகழ்ச்சி நிரலைப் பயன்படுத்தி, தேர்தல் பிரசுரமானது நீங்கள் அல்லது நம் சமூகம் அக்கறை கொள்ளும் பிரச்சினைகளை மையப்படுத்துவதை நாங்கள் உறுதி செய்வோம்.

முதலாம் கட்டத்தில், 447 பேர் தாங்கள் முக்கியமென கருதிய பிரச்சனைகளை எங்களிடம் கூறினர். அதைப் பற்றி நாங்கள் இங்கே ஒரு கட்டுரை எழுதியுள்ளோம். பெயர் மறைக்கப்பட்ட தகவல்களை இங்கே பார்க்கலாம் மேலும் 447 பதில்களை 28 பிரச்சனைகளாக நாங்கள் தொகுத்ததை இங்கே பார்க்கலாம். இப்பொழுது முக்கியமான பிரச்சனைகள் என்னவென்று நீங்கள் சொல்லவேண்டிய நேரமிது!