குடிமக்களின் நிகழ்ச்சிநிரல் 2022

குடிமக்களின் நிகழ்ச்சிநிரல் 2022

வேட்பாளர்களுடனோ அல்லது கட்சித் தலைவர்களுடனோ நேரடியாகப் பேச ஒரு வாய்ப்பும் கிடைக்காதவர்கள் எப்படி அவர்களது குறைகளை நிகழ்ச்சிநிரலில் கொண்டுவருவார்கள்? மக்கள் தங்களது குறைகளைக் கூற மற்றும் தங்கள் அரசியல் ஈடுபாட்டை அதிகரிக்க இருக்கும் ஒரு இடம் நியூ நரடிஃபின் குடிமக்களின் நிகழ்ச்சிநிரல் ஆகும். நீங்கள் மலேஷியா அல்லது சிங்கப்பூரில் வசிப்பவராக இருந்தால், கீழே நகர்த்தி எங்கள் பொதுமக்கள் கருத்துக்கணிப்பில் பங்கேற்று உங்கள் நாட்டிற்கு முக்கியமானது என நீங்கள் கருதும் குறைகளை எங்களுடன் பகிருங்கள். இந்தப் பொதுமக்கள் கருத்துக்கணிப்பு மூலம், நமது சமுதாயமான நீங்கள் அக்கறை கொள்ளும் விஷயங்கள் மீது கவனம் செலுத்தப்படுவதை நாங்கள் உறுதியளிக்கிறோம்.

உங்கள் குரலும் கவலைகளும் முக்கியமானது. நாங்கள் அதைக் கேட்கிறோம்.

ஒரு சுயாதீனமான, உறுப்பினர்களின் நிதியுதவி பெறும் ஜனநாயகத்துக்கான இயக்கம், எங்கள் வாசகராகிய நீங்கள் எதைப் பற்றி கவலைப்படுகிறீர்கள் என்பதைக் கண்டுபிடிப்போம். பிறகு, உங்கள் பிரச்சினைகள் சிங்கப்பூரில் தற்போதுள்ள எங்கள் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட ஆழமான கட்டுரைகளுடன் இணைக்கப்பட்டு, எங்கள் பிரசுரத்திற்கு ஒரு வழிகாட்டியாக பயன்படுத்தப்படும். நாங்கள் எங்கள் வாசகர்களை நம்புகிறோம், உங்களுக்கு முக்கியமான பிரச்சினைகள் குறித்து நாங்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் தகவலளிப்போம்.

கருத்துக்கணிப்பில் பங்குபெருங்கள்

உங்கள் நாட்டிற்கு முக்கியமானது என நீங்கள் கருதும் விஷயங்களைப் பகிர்ந்து உங்கள் குரலை வெளிப்படுத்துங்கள். உங்கள் சமர்ப்பிப்பு பெயர் வெளிப்படாமல் இருக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட பதில்களை எங்கள் சமூக ஊடகத் தளங்களில் பகிருவோம்.

உங்கள் வாக்கை அளியுங்கள்

ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 5, 2022 வரை, 2022 வரை, மலேசியா மற்றும் சிங்கப்பூர் சந்திக்கும் 5 முக்கியமான சிக்கல்களை மதிப்பிட எங்களுக்கு உதவுங்கள். 2019 இல், நாங்கள் சிங்கப்பூர் மக்களிடம் கேட்டோம், சிங்கப்பூர் சந்திக்கும் மிக முக்கியமான சிக்கல்களாக அவர்கள் எண்ணியது இவற்றை.

இணையானவர்களுடன் விவாதியுங்கள்

தங்களது நாடு சந்திக்கும் முக்கியமான சிக்கல்களைப் பங்கேற்பாளர்கள் விவாதிப்பதற்கு விவாதங்களை ஊக்குவிக்க மற்றும் ஜனநாயக வகுப்பறைகளை நடத்துவதற்கு ஒரு படிக்கும் பட்டியலை நாங்கள் உருவாக்குவோம். நீங்கள் இதற்கு முன்னர் வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்காத எண்ணங்களை வெளிப்படுத்த நியூ நரடிஃபின் ஜனநாயக வகுப்பறைகள் ஒரு இடமாகும்.

தொடர்ந்து இணைந்திருங்கள்

உரையாடலில் பங்கேற்பதற்கு மற்றும் சிங்கப்பூர் அல்லது மலேசியா சந்திக்கும் முதல் 5 முக்கிய பிரச்சனைகளை வாக்களிப்பதற்கு எங்களை ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் பின்தொடருங்கள். முடிவுகள் மற்றும் வரவிருக்கும் ஜனநாயக வகுப்பறைகள் குறித்த தகவல்களை அறிய, எங்கள் வாராந்திர நியூஸ்லெட்டருக்குப் பதிவு செய்யுங்கள்.

உங்கள் கருத்துப்படி, உங்கள் நாட்டிற்கு முக்கியமான சிக்கல்களாக எவற்றைக் கருதுவீர்கள்?

சிங்கப்பூர் மற்றும் மலேஷியாவிற்கு ஒரு பொதுமக்கள் கருத்துக்கணிப்பை இப்பொழுது நடத்துகிறோம். நியூ நரடிஃப் வளரும் போது, தென்கிழக்கு ஆசிய முழுவதற்கும் இதை விரிவாக்கத் திட்டமிடுகிறோம்.

“வேட்பாளர்களுடனோ அல்லது கட்சித் தலைவர்களுடனோ நேரடியாகப் பேச ஒரு வாய்ப்பும் கிடைக்காதவர்கள் எப்படி அவர்களது குறைகளை நிகழ்ச்சிநிரலில் கொண்டுவருவார்கள்?” என்ற கேள்விக்குப் பதிலைத்தேடி 2019 இல் நியூ நரடிஃபின் குடிமக்களின் நிகழ்ச்சிநிரல் வெளியிடப்பட்டது. சிங்கப்பூர் மக்களிடம் இருந்து 400 பதில்கள் வந்தன, அவற்றை சிங்கப்பூர் சந்திக்கும் 28 மிக முக்கிய சிக்கல்கள் எனத் தொகுத்தோம். விரைவில், இந்தக் சிக்கல்கள் சார்ந்த கட்டுரைகளை எங்கள் அனைத்து ஊடகங்களிலும் கொண்டுவந்தோம். அவற்றில் ஆழ்ந்த, ஆதாரம் சார்ந்த நீண்டகால இதழியல், ஆய்வு, விளக்கங்கள், பாட்கேஸ்ட்டுகள், பொம்மைப்படங்கள் மற்றும் காணொளிகள் அடங்கும். 2020 சிங்கப்பூர் பொதுத் தேர்தலுக்கு முன்பு, சிங்கப்பூர் குடிமக்களின் நிகழ்ச்சிநிரல் என்னும் ஒற்றைப் புத்தகத்தில் கட்டுரைகளைத் தொகுத்து வெளியிட்டோம். இந்தப் பிரச்சனைகளைக் கவனிக்க அனைத்து அரசியல் கட்சிகளையும் வரவேற்று அவர்களது பதில்களைப் பட்டியலிட்டோம்.

இந்த வருடம், குடிமக்களின் நிகழ்ச்சிநிரலை மலேஷியாவையும் உள்ளடக்குமாறு விரிவாக்கியுள்ளோம். மேலும் அறிய கீழே நகர்த்தவும்!

குடிமக்களின் நிகழ்ச்சிநிரல் மலேஷியா

2018 பொது தேர்தலில் பகட்டன் ஹரப்பன் ஜெயித்து, 60 ஆண்டுகால பரிசன் நேசனலின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த பொழுது வரலாறு எழுதப்பட்டது. இருந்தாலும்,  பகட்டன் ஹரப்பன் ஒரு நிலையான பெரும்பான்மை அரசாங்கத்தை அமைக்க முடியாமை, ஷெரட்டன் நடவடிக்கையால் பெரிக்கட்டன் நேசனலுக்கு அதிகாரம் நகருதல் மற்றும் அப்போதைய பிரதமர் முயீதின் யாசின் பதவியிறங்க போராட்டம் போன்ற பிரச்சனைகளால் மலேஷியா தற்போது அரசியல் நெருக்கடியில் இருக்கிறது. மலேஷிய மக்களின் கவலைகளை எடுத்துக்கூறி, தேர்தல் செயல்முறைகளில் குடிமக்கள் முக்கியப் பங்கு வகிப்பதைக் குடிமக்களின் நிகழ்ச்சிநிரல் மலேஷியா குறிக்கோளாகக் கொண்டுள்ளது.   
 

குடிமக்களின் நிகழ்ச்சிநிரல் சிங்கப்பூர்

சிங்கப்பூரின் 2020 பொதுத் தேர்தல் கோவிட்-19 பெருந்தொற்றின் இடையே ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்தைக் குறித்தது. பதவியில் இருந்த மக்கள் செயல் கட்சி தன் வாக்குகளில் பெரும் சரிவைச் சந்தித்தது, முன்பு போட்டியிடப்படாத GRC களில் பல எதிர்க்கட்சிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்நுழைந்தார்கள் மற்றும் PAP மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே இருந்த வாக்காளர் எண்ணிக்கை வேறுபாடு குறுகியது. முடிவு தெளிவாகத் தெரிந்தது: இன்னும் அதிகமான சிங்கப்பூர் மக்கள் மாற்று ஏற்பாடுகளை எதிர்நோக்குகிறார்கள் மற்றும் மாற்றத்திற்குத் தயாராக இருக்கிறார்கள். இந்த விசைக்கு வலுவூட்டி அடுத்த தேர்தல் காலத்திற்குள் சிங்கப்பூர் மக்களுக்கு மேலும் ஆற்றலூட்ட குடிமக்களின் நிகழ்ச்சிநிரல் சிங்கப்பூர் நோக்குகிறது.

குடிமக்கள் நிகழ்ச்சிநிரலின் முந்தைய பிரதி மிகவும் வெற்றிகரமாக இருந்தது.

  • சிங்கப்பூர் 2020 பொதுத் தேர்தலில் கவனம் ஈர்க்கக்கூடிய ஐந்து முக்கிய பிரச்சனைகளை வெற்றிகரமாகக் கணித்தது.
  • தேர்தல்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட கையேடு, தன் முதல் பாதிப்பு முழுவதும் விற்கப்பட்டு தற்போது இரண்டாம் பதிப்பில் இருக்கிறது.
  • தேர்தல் காலம் முழுவதும் ஒவ்வொரு நாள் இரவும் பல்வேறு பிரச்சனைகளில் ஜனநாயக வகுப்பறைகள் நடத்தப்பட்டு ஆர்வமாகப் பங்கேற்கும் பெருங்கூட்டத்தை ஈர்த்தது.

தேர்தல்களுக்கு அடுத்து, எதிர்கட்சிக்கு தங்கள் வாக்கை மாற்றிய மக்களுக்கும் “அரசியல் ரீதியாக செயலூக்கத்துடன்” இருந்தவர்களுக்கும் இடையே இருந்த தொடர்பை சிங்கப்பூர் அரசின் சிந்தனைக் குழுவான “தி இன்ஸ்டிடியூட் ஆஃப் பாலிசி ஸ்டடீஸ்(the Institute of Policy Studies)” கண்டுபிடித்தது. அந்தத் தொடர்பானது மாற்று செய்தி ஊடகங்களைப் (நியூ நரடிஃப் போன்று) படிப்பது அல்லது ஆன்லைன் சந்திப்பு போன்ற ஆன்லைன் அரசியல் செயல்பாடுகளில் (நியூ நரடிஃபின் ஜனநாயக வகுப்பறைகள் போன்று) பங்கேற்பது என்று அறியப்பட்டது. சில மாதங்களுக்குப் பிறகு, சிங்கப்பூரின் பிரதமர் அலுவலகம் நியூ நரடிஃப் மீது ஒரு போலீஸ் புகாரைப் பதிவு செய்தது. ஒரு வருடத்திற்கும் மேல் விசாரணை இழுக்கப்பட்டு, இறுதியாக, நியூ நரடிஃபின் இயக்கங்களைக் குறிப்பாகத் தாக்கும் சட்டத்தை  PAP அரசு அறிமுகப்படுத்துவதற்கு சில நாட்களுக்கு முன்பு கைவிடப்பட்டது. தெளிவாகத் தெரிகிறது, குடிமக்களின் நிகழ்ச்சிநிரல் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று.


குடிமக்களின் நிகழ்ச்சிநிரல் எப்படி நடத்தப்படும்?

2022 இல், சிங்கப்பூர் மற்றும் மலேஷியாவில் குடிமக்கள் நிகழ்ச்சிநிரலை நாங்கள் நடத்தப்போகிறோம். பரவலான மற்றும் அதிக பிரதிநிதித்துவத்தை எட்டுவதற்கு இரு நாடுகளிலும் இரு தனித்தனி கருத்துக்கணிப்புகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

ஜூலை 18, 2022 அன்று, இந்தக் கேள்விக்கான பொதுக் கருத்துக்கணிப்புப் பதில்களை ஏற்று, 2-வது கட்டத்தில் இருக்கிறோம்: உங்கள் கருத்துப்படி, உங்கள் நாட்டில் முக்கியமானதாக நீங்கள் கருதும் பிரச்சனைகள் எவை?

கட்டம் 01

கட்டம் 1 இல், ஒரு ஆன்லைன் கருத்துக்கணிப்புத் தளத்தை உபயோகித்து சிங்கப்பூர் மற்றும் மலேஷியாவில் தலா 1200 பேரிடம் கேட்கப்போகிறோம்: உங்கள் கருத்துப்படி, உங்கள் நாட்டில் முக்கியமாகக் கருதும் பிரச்சனைகள் எவை? வரவிருக்கும் அல்லது அடுத்தப் பொதுத் தேர்தல்களில் உங்கள் வாக்குகளுக்குப் போட்டியிடும் பொழுது வேட்பாளர்கள் பேச வேண்டியவை என நீங்கள் கருதுவது எதை? ஒரு தொழில்முறை கருத்துக்கணிப்பு நிறுவனத்தை உபயோகிப்பதால் இரு நாடுகளிலும் நமது பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும் புள்ளியியல் சார்ந்த பிரதிபலிப்பு மாதிரிகளை நாம் பெறுவோம்.

அதே நேரம், நமது நியூ நரடிஃப் சமுதாயத்தில் இருந்தும் நாங்கள் கேட்க விரும்புகிறோம். அதே கேள்விகளை ஒரு பொதுக் கருத்துக்கணிப்பு மூலம் பதிலளிக்க உங்களை அழைப்போம்.

பின்னர் இரு குழுக்களின் (தொழில்முறை கருத்துக்கணிப்பு மாதிரி மற்றும் பொது சமுதாயம்) பதில்களைத் தனித்தனியாக ஆய்வு செய்து ஒரு பட்டியலைத் தயார் செய்வோம்.

கட்டம் 02

கட்டம் 2 இல், எங்கள் கருத்துக்கணிப்பில் இருந்து அறியவந்த முக்கிய பிரச்சனைகளைப் பகிர்ந்து (சிங்கப்பூர்/மலேஷியா), சிங்கப்பூர் மற்றும் மலேஷியா மக்களிடம் தங்கள் நாடுகளில் அவர்கள் சந்திக்கும் 5 முக்கிய பிரச்சனைகளைத் தேர்ந்தெடுக்கச் சொல்வோம்.

கட்டம் 03

கட்டம் 3 இல், இரு கருத்துக்கணிப்பில் இருந்து நாங்கள் கண்டறிந்ததை வெளியிடுவோம். இந்தப் பிரச்சனைகளை மக்கள் நன்றாகக் புரிந்துகொள்வதற்கு கட்டுரைகள், பாட்கேஸ்ட்டுகள் மற்றும் விளக்கங்களை உருவாக்குவோம்.

கட்டம் 04

கட்டம் 4 இல், எங்கள் கண்டறிதல்கள் மற்றும் ஆதாரங்களை உபயோகித்து, அடுத்த தேர்தலுக்கு நமது சமுதாயத்தை அறிவுறுத்தி ஆற்றலூட்ட ஜனநாயக வகுப்பறைத் தொடர்களை உருவாக்குவோம்.


2019 இல் முதல் குடிமக்கள் நிகழ்ச்சிநிரலை நாங்கள் எப்படி நடத்தினோம் என்று அறியுங்கள்:

கட்டம் 1 இல், 447 பேர் தாங்கள் முக்கியமெனக் கருதும் பிரச்சனைகளை எங்களிடம் கூறினார்கள். எங்கள் பார்வையாளர்கள் அந்தப் பெயரிடப்படாதத் தரவைப் பார்த்து 447 பதில்களை எப்படி 28 பிரச்சனைகளாகத் தொகுத்தோம் என்றும் பார்க்கலாம்.

கட்டம் 2 இல், சிங்கப்பூர் சந்திக்கும் முக்கிய 5 பிரச்சனைகளை 678 பேர் வாக்களித்துத் தேர்ந்தெடுத்தார்கள். அனைத்து முடிவுகள், ஆய்வுகள் மற்றும் இடத்தின் படி தரவு (தொகுதி வாரியாக) ஆகிய அனைத்திற்கும் நமது சமூகத்திற்கு அணுகல் உண்டு.

கட்டம் 3 இல், அறியப்பட்ட பிரச்சனைகள் மீது கட்டுரைகள் வெளியிட்டோம். அனைத்துக் கட்டுரைகளும் சிங்கப்பூர் குடிமக்களின் நிகழ்ச்சிநிரல் என்று புத்தகமாகத் தொகுக்கப்பட்டது.

கட்டம் 4 இல், குடிமக்கள் நிகழ்ச்சிநிரலில் சுட்டிக்காட்டப்பட்டப் பிரச்சனைகள் மீது தங்கள் கருத்துகளை அரசியல் கட்சிகளிடம் கேட்டோம்.


அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

குடிமக்களின் நிகழ்ச்சிநிரல் என்றால் என்ன?

பொதுமக்கள் தங்கள் கவலைகளைக் கூறவும் அவர்களது அரசியல் ஈடுபாட்டை அதிகரிக்கவும் ஒரு இடத்தை உருவாக்கும் கருத்துக்கணிப்பே குடிமக்களின் நிகழ்ச்சிநிரல் ஆகும். உங்களது கவலைகள் எங்களது பார்வை மற்றும் ஜனநாயக வகுப்பறைகளை முறைப்படுத்த உதவும். இதனால் குடிமக்கள் அரசியல் ரீதியாக ஈடுபாட்டுடன் இருக்கவும் தென்கிழக்காசியர்கள் குடிமக்களாகத் தங்கள் சமுதாயத்தில் பங்கேற்கவும் வழிவகைகளை உருவாக்க முடியும்.

குடிமக்கள் நிகழ்ச்சிநிரலின் நோக்கம் என்ன?

எங்கள் பார்வையாளர்களான நீங்கள் இதன் மீது அக்கறை கொள்கிறீர்கள் என்பதை அறியவே குடிமக்களின் நிகழ்ச்சிநிரல் இருக்கிறது.

குடிமக்கள் நிகழ்ச்சிநிரலில் யார் பங்கேற்கலாம்?

இந்த வருடத்தில், மலேஷியா மற்றும் சிங்கப்பூர் மக்கள் இதில் பங்கேற்கலாம். நியூ நரடிஃப் வளர வளர தென்கிழக்கு ஆசியப்பகுதி முழுவதற்கும் இதை விரிவாக்கத் திட்டமிடுகிறோம்.

குடிமக்களின் நிகழ்ச்சிநிரல் எவ்வாறு நடத்தப்படுகிறது என்பதற்கான சுருக்கமான விளக்கம் கொடுக்க முடியுமா?
குடிமக்கள் நிகழ்ச்சிநிரலில் பங்கேற்க நான் என்ன செய்ய வேண்டும்?
  • கட்டம் 1 (ஜூன் 13 முதல் ஜூலை 4, 2022), உங்கள் நாட்டிற்கான பொதுக் கருத்துக்கணிப்பை நிரப்ப நீங்கள் அழைக்கப்படுவீர்கள்.
  • கட்டம் 2 (ஜூன் 24 முதல் ஜூலை 15, 2022), கட்டம் இ இல் உங்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்ட பிரச்சனைகளின் பட்டியலை வெளியிடுவோம், பின்னர் 5 மிக முக்கியமான சிக்கல்களைத் தேர்ந்தெடுக்க உங்களை அழைப்போம்.
  • எங்கள் ஜனநாயக வகுப்பறைகளில் பங்கேற்க.
  • எங்கள் வாராந்திர செய்திஅறிக்கைக்குப் பதிவுசெய்து தற்போதைய தகவலைத் தெரிந்திருக்க.
கருத்துக்கணிப்பிற்கான பதில்கள் எவ்வாறு உபயோகிக்கப்படும்?

அனைத்து கருத்துக்கணிப்பு பதில்களும் அடையாளம் காணக்கூடிய தகவல்களும் ரகசியம் காக்கப்படும் மேலும் நியூ நரடிஃபின் ஆய்வுக் குழுக்களால் மட்டுமே அணுகப்படும்.
கட்டம் 1 பொதுக் கருத்துக்கணிப்பில் இருந்து சில சுவாரஸ்யமான பதில்களை நாங்கள் மேற்கோள் காட்ட விரும்பலாம். கருத்துக்கணிப்புப் படிவத்தில், உங்கள் பதில்களை எங்கள் சமூக ஊடகத்தளங்களில் மேற்கோள் காட்ட நீங்கள் அனுமதி வழங்கும் வாய்ப்பு உள்ளது.


குடிமக்களின் நிகழ்ச்சிநிரலில் பங்கேற்று

உங்கள் குரலும் கவலைகளும் முக்கியமானது.